ஜலோர் மாவட்டம்



ஜலோர் மாவட்டம் (Jalore District) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் ஜலோர் ஆகும். இம்மாவட்டம் 10,640 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,828,730 ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

ஜலோர் மாவட்டத்தின் வடமேற்கில் பார்மேர் மாவட்டம், வடகிழக்கில் பாலி மாவட்டம், தென்கிழக்கில் சிரோஹி மாவட்டம், தென்மேற்கில் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் எல்லையாகக் கொண்டது.

புவியியல்[தொகு]

இம்மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறான லூனி ஆற்றில் மழைக்காலங்களில் மட்டும் நீர் பாயும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஜலோர் மாவட்டத்தை, வருவாய் நிர்வாக வசதிக்காக ஒன்பது வருவாய் வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவைகள்; அகோர், ஜலோர், பின்மால், ரனிவாரா, சயாலா, பகோடா, ஜஸ்வந்த்புரா, சிதால்வானா மற்றும் சஞ்சோர் ஆகும்.[1]

மேலும் ஊரக வளர்ச்சிக்காக, இம்மாவட்டம் ஏழு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

இம்மாவட்டத்தின் 264 கிராம ஊராட்சிகளில் 1111 கிராமங்களும், 767 வருவாய் கிராமங்களும் உள்ளது. இம்மாவட்டத்தில் ஜலோர், பின்மால் மற்றும் சஞ்சோர் என மூன்று நகராட்சிகள் கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

கால்நடைகளை மேய்ப்பவர்

ஜலோர் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதரம் வேளாண்மை மற்றும் கால்நடைகளைப் பராமரித்தலே ஆகும். இம்மாவட்டத்தின் நிலத்தடி சுரங்கங்களில் ஜிப்சம், சுண்ணாம்ப்புக்கல், பளிங்குக் கல் கனிசமாகக் கிடைக்கிறது.

போக்குவரத்து[தொகு]

பதிந்தா - கண்ட்லா துறைமுகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 15, ஜலோர் மாவட்டம் வழியாகச் செல்கிறது.

இரண்டு நடைமேடைகள் கொண்ட ஜலோர் தொடருந்து நிலையம்[2], அகமதாபாத், பெங்களூர், பிகானேர், ஜோத்பூர், காந்திதாம் மற்றும் பார்மர் நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள்தொகையியல்[தொகு]

10,640 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜலோர் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,828,730 ஆகும். அதில் ஆண்கள் 936,634 ஆகவும்; பெண்கள் 892,096ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 952 பெண்கள் வீதம் உள்ளனர். பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ( 2001 - 2011) 26.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 172 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 54.86% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தைகள் 316,455 ஆகவுள்ளனர்.

ஜலோர் மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 17,32,852 (94.76%);; இசுலாமியர்கள் 78,990 (4.32 %) ஆகவும் உள்ளனர். பிற சமயத்தவர்கள் 0.92% ஆகவுள்ளனர்.[3]

தட்பவெப்பம்[தொகு]

ஜலோர் மாவட்டத்தின், கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 50 பாகை செல்சியமும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 4 பாகை செல்சியசாகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 412மிமீ ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajasthan Budget 2012-13" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  2. Jalore Railway Station
  3. Jalor (Jalore) District : Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலோர்_மாவட்டம்&oldid=3572931" இலிருந்து மீள்விக்கப்பட்டது