ரந்தம்பூர் கோட்டை

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ரந்தம்பூர் கோட்டை

இடம்சவாய் மாதோபூர் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
வகைபண்பாட்டுக் களம்
ஒப்பளவுii, iii
உசாத்துணை247
UNESCO regionதெற்காசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2013 (36th தொடர்)

ரந்தம்பூர் கோட்டை (Ranthambore Fort) இந்திய மாநிலமான இராஜஸ்தானில் சவாய் மாதோபூர் நகரத்திற்கு அருகே அமைந்த ரந்தம்பூர் தேசியப் பூங்காவின் பரப்பில் அமைந்துள்ளது.

சௌகான் வம்ச ராஜபுத்திர மன்னரான ஹம்மிரதேவன் (1283-1301) ஆட்சிக் காலத்தில் ரந்தம்பூர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.

ரந்தம்பூர் கோட்டையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

ரந்தம்பூர் கோட்டை சௌகான் வம்ச ராஜபுத்திர ஆட்சியாளர்களால் கிபி 994-இல் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.

சௌகான் ஆட்சியாளர்கள் காலம்[தொகு]

ரந்தம்பூர் கோட்டையின் முந்தைய பெயர் ராணாஸ்தம்பம் அல்லது ராணாஸ்தம்பபுரம் ஆகும்.

இக்கோட்டை முதலாம் பிரிதிவிராஜ் ஆட்சிக் காலத்தில் (1090-1110) சமண சமயத்துடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தசேனசூரி என்பவரால், சமண சமய தீர்த்தங்கரர்களின் புனித தலங்களில் பட்டியலில் ரந்தம்பூர் கோட்டையும், அரண்மனையும் சேர்க்கப்பட்டது. முகலாயர்கள் காலத்தில் 19வது தீர்த்தங்கரரான மல்லிநாதரின் கோயில், ரந்தம்பூர் கோட்டையில் கட்டப்பட்டது.[3]

1192-இல் கோரி முகமது மூன்றாம் பிரிதிவிராஜ் சௌகானைத் தோற்கடித்து ரந்தம்பூர் கோட்டையைக் கைப்பற்றினான். பிரிதிவிராஜ் சௌகானின் மகன் நான்காம் கோவிந்தராஜன் கோரி முகமதுவிற்கு கப்பம் செலுத்தி ரந்தம்பூரை ஆண்டார். [4]

1569-இல் ரந்தம்பூர் கோட்டையில் அக்பர் நுழைதல், ஓவியம்

தில்லி சுல்தான் இல்டுமிஷ் 1226-இல் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றினார். சௌகான் வம்சத்தவர்கள் 1236-இல் சௌகான் தில்லி சுல்தானிடமிருந்த ரந்தம்பூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1299-இல் அலாவுதீன் கில்சிக்கு துரோகம் செய்த முகமது ஷா என்பவருக்கு ரந்தம்பூர் மகாராஜா ஹமீர் தேவ் சௌகான் அடைக்கலம் தந்தார். இதனால் வெகுண்ட தில்லி சுல்தான் கில்ஜி 1301-இல் நேரடியாகத் தலையிட்டு ரந்தம்பூர் கோட்டையைப் போரில் வென்றார்.

உதய்பூர் இராச்சியத்தில்[தொகு]

உதய்பூர் இராச்சியத்தின் மன்னர் ராணா ஹமீர் சிங் (1326–1364) மற்றும் ராணா கும்பா (1433–1468) ஆட்சிக்காலங்களில் ரந்தம்பூர் கோட்டை கைப்பற்றினர்.[5][6]முதலாம் உதய் சிங் ஆட்சிக் காலத்தில் (1468–1473) பூந்தி இராசபுத்திர ஹர சௌகான் கையில் சென்றது.

1569-இல் அக்பர் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றும் வரை குஜராத் சுல்தான் பகதூர் ஷாவிடம் 1532 முதல் 1535 முடிய இருந்தது.

17-ஆம் நூற்றாண்டில் ரந்தம்பூர் கோட்டை ஜெய்ப்பூர் மகாராஜாவிடம் சென்றது. ஜெய்ப்பூர் மன்னர்கள் ரந்தம்பூர் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளை விலங்குகளை வேட்டைக்களமாகக் கொண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் ஜெய்ப்பூர் இராச்சியத்தில் இருந்த இரந்தம்பூர் கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1950-இல் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ரந்தம்பூர் கோட்டைக்குள் பிள்ளையார், சிவன் மற்றும் இராமர் கோயில்களும், சமண சமயத்தின் மூன்றவது தீர்த்தங்கரர் சம்பவநாதர் கோயிலும், ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதர் கோயிலும் உள்ளது.

ரந்தம்பூர் கோட்டையின் முதன்மை நுழைவு வாயில்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hill Forts of Rajasthan
  2. Six Rajasthan hill forts on Unesco list
  3. Singh, Narendra (1 January 2001). Encyclopaedia of Jainism. Vol. 1. Anmol Publications / Indo-European Jain Research Foundation. p. 5538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-0691-2. Archived from the original on 12 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2017. {{cite book}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  4. Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  5. IA, Vol. XLII, pp. 57-64
  6. Yasovarman of Kanau,p.123. Books.google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரந்தம்பூர்_கோட்டை&oldid=3439886" இலிருந்து மீள்விக்கப்பட்டது