வலைவாசல்:வைணவம்

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்

வைணவ வலைவாசல்
.

அறிமுகம்

வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் இந்துசமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு. நாளாயிர திவ்யபிரபந்தம் எனும் ஆழ்வார்கள் இயற்றிய தமிழ்நூலை வேதங்களுக்கு நிகராக போற்றுவதனால் இச்சமயத்திற்கு வைணவம் என்ற பெயர் எற்பட்டதாக கருத்துண்டு. உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.

வைணவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

திருமால் அல்லது விஷ்ணு இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்று அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

வைணவ அடியார்கள்

ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.

சிறப்புப் படம்

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.


தொகுப்பு

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?


  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமால் பார்த்தசாரதி திருக்கோலத்தில் மீசையுடன் காணப்பெறுகிறார். மேலும் சக்கராயுதம் இன்றியும் காணப்பெறுகிறார்.


தொடர்பானவை

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • வைணவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வைணவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வைணவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வைணவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வைணவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வைணவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
சைவம்சைவம்
சைவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் சைவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணாபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வைணவம்&oldid=3783253" இலிருந்து மீள்விக்கப்பட்டது