சீக்கிய சிற்றரசுகள்

சீக்கிய சிற்றரசுகள்
ਸਿੱਖ ਮਿਸਲ
1716–1799
நாட்டுப்பண்: Deg Tegh Fateh
தலைநகரம்அமிர்தசரஸ்
பேசப்படும் மொழிகள்
அரசாங்கம்கூட்டு முடியாட்சி
ஜடேதார் 
• 1716-1733
பாபா தர்பரா சிங், சாச்சா சிங் தில்லான்
• 1733–1748
நவாப் கபுர் சிங்
• 1748–1783
ஜெஸ்சா சிங் அலுவாலியா
வரலாறு 
• தளபதி பண்டா பகதூரின் இறப்பு
1716
• ரஞ்சித் சிங் சிற்றரசுகளை இணைத்து சீக்கிய பேரரசை நிறுவுதல்
1799
பரப்பு
[convert: invalid number]
மக்கள் தொகை
• 1849 மதிப்பிடு
3 million
நாணயம்நானாசாகி
முந்தையது
பின்னையது
Durrani Empire
Mughal Empire
Maratha Empire
Sikh Empire

சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு (ஆட்சி காலம்: 1716–1799) (Misl) என்பது தன்னாட்சியுரிமை கொண்ட சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பாகும்.[1][2]சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டுகளில் சீக்கியர்கள் அதிகம் வாழும் தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதிகளில், மொகலாயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சீக்கிய சமயத்தை பாதுகாக்கவும் உருவானது.[3] சீக்கிய சிற்றரசுகள் படைபலத்திலும், பரப்பளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும், மற்ற சிற்றரசுகளின் உதவியுடன் மொகலாயர் ஆதிக்கத்தில் இருந்த சீக்கியர்களின் பகுதிகளை கைப்பற்றி, சீக்கிய அரசை விரிவுபடுத்தியும், நிதி ஆதாரங்களையும் குவித்தனர்.[4] சீக்கியக் கூட்டமைப்பில் உள்ள சிற்றரசுகள் அமிர்தசரஸ் நகரில் ஆண்டிற்கு இரு முறை கூடி, அரசியல், சட்ட ஒழுங்கு குறித்து விவாதித்தனர்.

வரலாறு[தொகு]

மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேஜ்பகதூரை தலைசீவியதால், மனம் புண்பட்ட சீக்கியர்கள் கிளர்தெழுந்து, மொகலாயர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, சீக்கியப் போர்ப் படைகளை நிறுவினர் [5] பின்னர் ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் அனைத்து சீக்கிய சிற்றரசர்கள் கூட்டமைப்பு ஒன்று கூடி 1799ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசை நிறுவினர்.

சீக்கிய சிற்றரசுகள்[தொகு]

சீக்கிய சிற்றரசுகள் பட்டியல்
வலிமை (1780)[6] சிற்றரசுகள் தலைநகர் 1759இல் சிற்றரசுகளின் பரப்பு
1. புல்க்கியான் பாட்டியாலா
நாபா
பர்னாலா, பதிண்டா, சாங்பூர்
2. அலுவாலியா கபூர்தலா நூர்மகால், தல்வண்டி, பக்வாரா, கானா தில்லான்
3. பாங்கி அமிர்தசரஸ் தான் தரண் சாகிப், லாகூர்
4. கனையா சோகியான் அஜ்னலா, நாக், குர்தாஸ்பூர், தேரே பாபா நானக்,
காலநௌர், பதான்கோட், சுஜன்பூர்
5. ராம்காரியா ஸ்ரீ ஹரிகோவிந்த்பூர் படாலா, முகெரியன், கோமென் முதலியன
6. சிங்புரியா சலந்தர் சிங்புரா, அமிர்தசரஸ், சேக்குபுரா முதலியன
7. பஞ்ச்காரியா சாம் சௌரசி, ஹரியானா முதலியன
8. நிஷான்வாலியா அம்பாலா, பெரேஸ்பூர் சர்தார் தசௌந்தா சிங் கில்
9. சுகெர்சாகியா குஜ்ஜரன் வாலா கிலா திதார் சிங், கிலா மியான் சிங், பெரோஷ்வாலா, புட்டலா சாம் சிங், மொகல் சாக்
10. தல்லேவாலியா ரஹோன் நகோதார், தல்வான், படாலா, ரஹோன், பில்லூர், லூதியானா முதலியன்
11. நாகை சௌனியன் பஹேர்வால், கேம் கரன், குடியான், திலாப்பூர், ஒகேரா
12. ஷாகீதான் ஷாசாத்பூர் தல்வண்டி, வடக்கு அம்பாலா

சீக்கிய சிற்றரசுகளின் பரப்பு[தொகு]

சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பீன் பகுதிகள்

சீக்கிய சிற்றரசுகள் சட்லஜ் ஆற்றினை மையமாகக் கொண்டு, இரண்டு முக்கியப் பிரிவாக பிரிந்து ஆண்டன. சட்லஜ் ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள 11 சீக்கிய சிற்றரசுகளை மஜ்ஜா சீக்கியர்கள் என்றும், சட்லஜ் ஆற்றின் தெற்கு பகுதியை ஆண்ட சீக்கிய சிற்றரசுகளை மால்வா சீக்கியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்..

சீக்கிய சிற்றரசுகள் நடத்திய போர்கள்[தொகு]

  1. கோல்வார் போர் (அமிர்தசரஸ், 1757)
  2. லாகூர் போர் (1759)
  3. சியால் கோட் போர் (1761)
  4. குஜ்ஜரன்வாலா போர் (1761)
  5. சியால் கோட் போர் (1763)
  6. அமிர்தசரஸ் போர் (1797)
  7. குஜராத் போர் (1797)
  8. அமிர்தசரஸ் போர் (1798)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Heath, Ian (1 Jan 2005). "The Sikh Army". Osprey இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150422075226/http://books.google.co.uk/books?id=YIh9eQlojGsC&pg=PA3&lpg=PA3&dq=sikh+confederacy&source=bl&ots=3Bj2hk1IYB&sig=z-2k9KvkFU1DKIn1B3jCWKteX1g&hl=en&sa=X&ei=ds2zUZnWHuOj0QXdtoDgBQ&ved=0CDwQ6AEwBDgK#v=onepage&q=sikh%20confederacy&f=false. பார்த்த நாள்: 9 June 2013. 
  2. "The Khalsa Era". Nishan Sahib. 2011. http://www.sikhmuseum.com/nishan/khalsa/index.html. பார்த்த நாள்: 9 June 2013. 
  3. Singh, Khushwant (11 October 2004). A History of the Sikhs: 1469–1838 (2nd ). Oxford University Press. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-567308-1. http://books.google.com/books?id=MD9uAAAAMAAJ. பார்த்த நாள்: 1 April 2011. 
  4. Kakshi 2007, ப. 73
  5. Gandhi, Surjit Singh (1 February 2008). "13 Khalsa Battles Against Islamic Imperialism and Hindu Conservatism". History of Sikh Gurus Retold: 1606–1708 C.E. Atlantic Publishing. பக். 814. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0858-0. http://www.amazon.co.uk/History-Sikh-Gurus-Retold--1708/dp/8126908580/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1296039499&sr=1-1. பார்த்த நாள்: 26 January 2010. 
  6. Griffin, Lepel Henry (1893). Ranjít Singh. Clarendon Press. பக். 78. http://books.google.com/books?id=rNxGAAAAIAAJ&pg=PA237&dq=Ranj%C3%ADt+Singh+By+Sir+Lepel+Henry+Griffin&as_brr=1&ei=KtrIS5abLoTaNbeL7LUG&cd=1#v=onepage&q=order%20of%20importance&f=false. 

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Ahmad Shah Batalia, Appendix to Sohan Lal Suri’s Umdat-ut-Tawarikh. Daftar I, Lahore, 1X85, p. 15; Bute Shahs Tawarikh-i-Punjab, Daftar IV, (1848), (MS., Ganda Singh’s personal collection. Patiala), p. 6; Kanaihya Lal, Tarikh-i-Punjab, Lahore, 1877, p. 88; Ali-ud-Din Mufti, Ibratnama, Vol. I, (1854), Lahore, 1961, p. 244. Muhammad Latif, History of the Punjab (1891), Delhi, 1964, p. 296.
  • Ian Heath, The Sikh Army, 1799–1849 (Men-at-arms), Osprey (2005) ISBN 1-84176-777-8
  • Harbans Singh, The Heritage of the Sikhs, second rev. ed., Manohar (1994) ISBN 81-7304-064-8
  • Hari Ram Gupta, History of the Sikhs: Sikh Domination of the Mughal Empire, 1764–1803, second ed., Munshiram Manoharlal (2000) ISBN 81-215-0213-6
  • Hari Ram Gupta, History of the Sikhs: The Sikh Commonwealth or Rise and Fall of the Misls, rev. ed., Munshiram Manoharlal (2001) ISBN 81-215-0165-2
  • Gian Singh, Tawarikh Guru Khalsa, (ed. 1970), p. 261.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கிய_சிற்றரசுகள்&oldid=3776722" இலிருந்து மீள்விக்கப்பட்டது