கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்

கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் (Federal Information Processing Standards, FIPS) படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரங்களாகும்.[1]

கணினி பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வகைப்பட்ட பயன்பாடுகளின் தேவையைக் கருதி இந்த சீர்தரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்முறை சீர்தரங்கள் ஏற்கெனவே இல்லாத நேரங்களுக்கு இவை பயன்படுகின்றன.[1] அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI), ஐஇஇஇ (IEEE), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) போன்ற தொழில் சமூகங்களில் பயன்படுத்தப்படும் சீர்தரங்கள் பொருத்தமாக மாற்றப்பட்டு பல கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்களின் வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "FIPS General Information". 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.

வெளி இணைப்புகள்[தொகு]