காமரூப பேரரசு

காமரூப பேரரசு
350–1140
நிலைஇராச்சியம்
தலைநகரம்பிராக்ஜோதிஷ்புரம்
திஸ்பூர்
துர்ஜெயா
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பாரம்பரிய கால இந்திய அரசு
• தொடக்கம்
350
• முடிவு
1140
பின்னையது
}
அகோம் பேரரசு
கச்சோரி இராச்சியம்
காமதா இராச்சியம்
சுதியா நாடு
தற்போதைய பகுதிகள் இந்தியா
 வங்காளதேசம்
தாலமியின் உலக வரைபடத்தில் காமரூபத்தை சிர்ஹாதியா எனக் குறித்துள்ளார்
தற்கால வங்காளம், அசாம், பூடான், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட காமரூபப் பேரரசு
காமரூப பேரரசு புவியியல் தொடர்பான கல்வெட்டு குறிப்புகளிலிருந்து[1]

காமரூப பேரரசு அல்லது பிராக்ஜோதிஷ்புரம் (Kāmarūpa or Pragjyotisha), இந்தியாவின் வடகிழக்கில் தேவா பேரரசுக்குப் முன்னர் எழுச்சி கொண்ட அசாமியப் பேரரசாகும்.[2] இப்பேரரசு 350 முதல் 1140 ஆண்டு முடிய மூன்று அரச குலங்கள், தற்கால குவகாத்தி, திஸ்பூர் மற்றும் துர்ஜெயா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இப்பேரரசில் தற்கால அசாமின் பிரம்மபுத்திர சமவெளி, பூடான், வங்காளம் மற்றும் பிகாரின் சில பகுதிகள் இருந்தன.[3]

மகாபாரத காவியத்தில் ஜோதிஷ்புரம் நகரத்தைப் பற்றியும், அதனை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரரசைக் குறித்த ஆதாரங்கள்[தொகு]

புவியியல் மற்றும் வரலாற்று அறிஞர் தாலமியின் குறிப்புகளில், இப்பேரரசின் மக்களை கிராதர்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் எனக் குறிப்பிடுகிறார்.[4]

அசோகரின் அலகாபாத் தூண்களில் காமரூபம் மற்றும் தேவா நாட்டை ஆண்ட மன்னர்களை பிராத்யாந்த நிரிபதிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. [5]

காமரூபம் பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

வர்மன் அரச குலத்தினர் 350–650[தொகு]

  1. புஷ்யவர்மன் 350 - 374 காமரூப பேரரசை நிறுவியவர்
  2. சமுத்திர குப்தன் 374–398[6] [7]
  3. கல்யாணவர்மன் 422-446 தேவா பேரரசை வென்றவர்
  4. மகேந்திரவர்மன் 470-494
  5. நாராயணவர்மன் 494–518
  6. பூதிவர்மன் 518–542 அஸ்வமேதயாகம் செய்தவர்
  7. பாஸ்கர வர்மன் 542-566 - கி. பி 643இல் யுவான் சுவாங் பாஸ்கரவர்மனுடன், பிரயாகை எனப்படும் அலகாபாத்தில் நடந்த திருவிழாவில் ஹர்ஷவர்தனருடன் கலந்து கொண்டார்.
  8. ஸ்திதவர்மன் 566–590 தற்கால வங்காள தேசத்தை வென்றவர்.

காமரூப மிலேச்ச குல அரசர்கள் 650–900[தொகு]

  1. சாலஸ்தம்பா 655–670 காமரூப பேரரசின் ஒரு பகுதிக்கு ஆளுனராக இருந்தவர்,[8]
  2. விஜயா என்ற விக்கிரஹஸ்தம்பா
  3. ஹர்சதேவா என்ற ஹர்சவர்மன் (725-745)
  4. இரண்டாம் பாலவர்மன்
  5. சலம்பன் [9]
  6. ஹர்ஜாரவர்மன் (815-832)
  7. வனமால வர்மதேவன்
  8. ஜெயமாலன் என்ற வீரபாகு (855-860)
  9. மூன்றாம் பாலவர்மன் (860-880)
  10. தியாகசிம்மன் (890-900)

காமரூப பால அரசமரபு ஆட்சியாளர்கள்[தொகு]

  1. பிரம்ம பாலன் (900-920)
  2. இரத்தின பாலன் (920-960)
  3. இந்திர பாலன் (960-990)
  4. கோபாலன் (990-1015)
  5. ஹர்சபாலன் (1015-1035)
  6. தர்மபாலன் (1035-1060)
  7. ஜெயபாலன் (1075-1100)
  8. திம்கியாதேவன் (1110–1126)

மற்றவர்கள் 1123-1140[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. (Lahiri 1991, ப. 26–28)
  2. Suresh Kant Sharma, Usha Sharma - 2005,"Discovery of North-East India: Geography, History, Cutlure, ... - Volume 3", Page 248, Davaka (Nowgong) and Kamarupa as separate and submissive friendly kingdoms.
  3. (Sircar 1990, ப. 63–68)
  4. Sircar, D. C., (1990) Chapter 5: Epico-Puranic Myths and Legends, pp 81
  5. (Sharma 1978, p. xv)
  6. (Lahiri 1991, ப. 68)
  7. (Lahiri 1990, ப. 72) The Nagajari Khanikargaon rock inscription of 5th century found in Golaghat adduces the fact that the kingdom spread to the east very quickly.
  8. (Lahiri 1991, ப. 76)
  9. Pralambha, read from the Tezpur plates, can be corrected to Salambha, in light of the Parbatiya plates, (Sarma 1978, p. 105)

மேற்கோள்கள்[தொகு]

  • Bhushan, Chandra (2005). Assam: Its Heritage and Culture. Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-352-4. http://books.google.com/books?id=p_n-naXpdhkC. 
  • Choudhury, P. C. (1959). The History of Civilization of the People of Assam to the Twelfth Century AD. Department of History and Antiquarian Studies, Gauhati, Assam. 
  • Guha, Amalendu (December 1983), "The Ahom Political System: An Enquiry into the State Formation Process in Medieval Assam (1228–1714)", Social Scientist, 11 (12): 3–34, doi:10.2307/3516963 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Lahiri, Nayanjot (1991). Pre-Ahom Assam: Studies in the Inscriptions of Assam between the Fifth and the Thirteenth Centuries AD. Munshiram Manoharlal Publishers Pvt Ltd. 
  • Puri, Baij Nath (1968). Studies in Early History and Administration in Assam. Gauhati University. 
  • Sarkar, J N (1990), "Koch Bihar, Kamrup and the Mughals, 1576–1613", in Barpujari, H K (ed.), The Comprehensive History of Assam: Mediebal Period, Political, vol. II, Guwahati: Publication Board, Assam, pp. 92–103 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Sarkar, J. N. (1992), "Chapter II The Turko-Afghan Invasions", in Barpujari, H. K. (ed.), The Comprehensive History of Assam, vol. 2, Guwahati: Assam Publication Board, pp. 35–48
  • Sircar, D C (1990), "Pragjyotisha-Kamarupa", in Barpujari, H K (ed.), The Comprehensive History of Assam, vol. I, Guwahati: Publication Board, Assam, pp. 59–78 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Sircar, D C (1990), "Political History", in Barpujari, H K (ed.), The Comprehensive History of Assam, vol. I, Guwahati: Publication Board, Assam, pp. 94–171 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Sharma, Mukunda Madhava (1978). Inscriptions of Ancient Assam. Gauhati University, Assam. 
  • Watters, Thomas (1905). Davids, T. W. Rhys; Bushell, S. W. eds. On Yuan Chwang's Travels in India. 2. London: Royal Asiatic Society. http://books.google.com/books?id=0VIoAAAAYAAJ. பார்த்த நாள்: January 29, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமரூப_பேரரசு&oldid=3686899" இலிருந்து மீள்விக்கப்பட்டது