இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள்


இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள் (Protected areas of India) 2004 ஆம் ஆண்டு மே மாத கணக்குப்படி சுமார் 1,56,700 சதுர கிலோமீற்றர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 40% ஆகும்.

வகைப்பாடு[தொகு]

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் வழிகாட்டலின்படி இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்களில் சில:

தேசியப் பூங்காக்கள்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு இரண்டு : இந்தியாவில் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு தற்போதைய உத்தராகண்டம் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா தான் ஏற்படுத்தப்பட்டது. இதன் பழைய பெயர் ஹேய்லே தேசியப் பூங்கா என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் 1970 ஆண்டுகளில் மேலும் 5 தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 120 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு 39,919 km²(15,413 sq mi) ஆகும். அதே வேளையில் இந்தியாவின் மொத்த நிலப்பரபில் இது 1.21% மட்டுமே ஆகும். இக்காடுகளில் பல்வகைப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கின்றன.

வனவிலங்குகள் காப்பகம்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு நான்கு : இந்தியாவில் 500 விலங்குகள் காப்பகம் உள்ளது. இவற்றுள் 48 புலிகள் காப்பகமும் அடங்கும்.[1] தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் ராஜாஜி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.

உயிர்க்கோள இருப்புக்கள்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு ஐந்து : இந்திய அரசு இயற்கை வாழிடங்கள் கெடாது பேணும் பொருட்டு இதுவரை 18 இடங்களில் உயிர்க்கோள மண்டலங்களை ஏற்படுத்தியுள்ளது. [2]

தேர்ந்தெடுத்து பாதுகாக்கப்படும் காடுகள்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு நான்கு : இவை மேய்ச்சல் (grazing), வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டும் வேலைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகும். இந்த இடங்களில் அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக வாழும் மலைவாழ் உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழைய முடியும்.

பாதுகாப்பு மற்றும் சமூக இருப்புக்கள்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு ஐந்து மற்றும் ஆறு : இப்பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் (Wildlife corridor) அதிகம் உள்ளவையும், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்ற இடைப்பட்ட மண்டலப்பகுதியாகவும் (Buffer zone) அமையப்பெற்ற இடமாகும்.

கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட காடுகள்[தொகு]

ஐயூசிஎன் வகைப்பாடு ஆறு : இவ்வகையான பகுதிகளில் பேண்தகுநிலையில் விலங்குகள், தாவரவளம் போன்றவை அவற்றின் வாழ்விடத்திற்கேற்ப கிராம பஞ்சாயத்தார் பாதுகாக்கின்றனர்.

தனியாரால் பாதுகாக்கப்படும் பகுதிகள்[தொகு]

(Private protected areas of India)

இந்த மாதரியான இடங்களை தனியாரோ, அல்லது அரசில் பதிவு செய்துள்ள அமைப்புகளோ பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.

பாதுகாப்பு பகுதிகள்[தொகு]

இவை தனியாரின் இடங்கள் மற்றும் அரசின் தனிப்பட்ட இடங்களை இந்திய அரசு பாதுகாகும் பகுதிளைக் குறிக்கும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chetan Chauhan (2011-06-21), Kawal is tiger reserve no. 42, New Delhi: Hindustan Times, archived from the original on 2011-08-26, பார்க்கப்பட்ட நாள் 2011-06-21
  2. "Ministry of Environment and Forests: "Annual Report 2010-2011"" (PDF). Archived from the original (PDF) on 2017-01-12. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.