அணிலாடு முன்றிலார்

அணிலாடு முன்றிலார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது. [1] அதில் 'அணிலாடு முன்றில்' என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். இவரது பெயர் தெரியாத நிலையில் குறுந்தொகையில் உள்ள பாடல்களைத் தொகுத்த அரசப்புலவர் பூரிக்கோ என்பவரே இவருக்கு அணிலாடு முன்றிலார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளார்.

இவரது பாடல் தரும் செய்தி[தொகு]

  • தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தலைவியின் உடலும், உள்ளமும் வேறுபட்டிருந்தது. இதனைக் கண்ட தோழி கவலைப்படுகிறாள். தலைவி தோழியிடம் தெம்பாகப் பேசுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.
  • காதலர் என்னுடன் இருக்கும்போது ஊர்த்திருவிழாவில் மகிழ்வோடு உலாவுவேன். சிற்றூரில் மக்கள் தொழில் புரியச் சென்ற காலத்தில் அவர்களது முற்றத்தில் அணில் விளையாடுவது போல வெறிச்சோடித் துன்புறுகின்றேன், என்கிறாள் தலைவி.
  • அணில் விளையாடுவது போல நெஞ்சில் துன்பம் விளையாடுகிறதாம்.

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிலாடு_முன்றிலார்&oldid=1804823" இலிருந்து மீள்விக்கப்பட்டது